சத்தமில்லாது நீ கொடுத்த முத்தத்தில் உயிர்நாடி அதிர்கிறது முத்தத்தின் இலக்கணங்களை இலக்கங்கள் வைத்து உணர்த்திட்டாய் காட்சியில் இல்லாத பூக்களும் தென்படாத பட்டாம்பூச்சிகளும் மலர்ந்து நம்மை சுற்றி பறந்தன என்னுடலின் பாகங்கள் யாழினை மீட்டியதோர் போல உமிழ்நீர் சுவையோடு மயங்கியபடி உன்னில் என்னை நொடி நொடியாக தொலைத்தேன் காமக்கதவுகளின் தாழினை தேடியப்படி....
No comments:
Post a Comment