November 8, 2013

பல்சுவை கவிதை மொட்டுக்கள்

 காதலற்ற கணவனாக
நூறு முத்தங்கள் வேண்டாம்
அன்பு காதலனாக
ஒரு முத்தம் போதும்
காதலில் குழைத்த
இதழ் குவிப்பே
இனிமையிலும் இனிமை... 
--------------------------------------------------------------------------------------------
நீயில்லாத இரவு
ஆதவன் நிறைந்த
பகல் போல
கொதிக்கிறது...
 
--------------------------------------------------------------------------------------------
எந்த வார்த்தை கோர்த்து
நான் என்ன சொல்லு சொல்ல
ஒத்த சொல்லு சொல்லு மச்சான்
உன் உசுரே நான் தான்னு
ஒத்த உசுர உனக்கே தந்து
ஓருயிரா நான் இருக்கேன்

இந்த பூமியில்ல நீ தேடு
அந்த சொர்கத்திலும் நீ பாரு
என்னை போல ஒருத்தி
உன்னை காதலிக்க இங்கே யாரு

கண் மூடி கண் திறந்தா
காண்பதெல்லாம் உன் உருவம்
கண் அயர்ந்து நான் தூங்கி
கண்டதில்லை பல காலம்

கொழுந்துவிட்டு எரியுது
உன் மேல உள்ள ஆசை தான்
தணித்துவிட்டு போயிடு
பாவிமக படும்பாட்டை தான்

பூமாலை நீ சூட
மணமகளா காத்திருக்கேன்
பூமாலை கருக்கும் முன்னே
மணமுடிக்க வந்துவிடு 
--------------------------------------------------------------------------------------------
ஊனும் நீ உயிரும் நீ
எனை ஆளும் மனமும் நீ
வாழ்வின் வசந்தம் நீ
என் முடிவின் வழியும் நீ
யாதும் நீ யாவுமாய் நீ....  
 
--------------------------------------------------------------------------------------------
 நான் கும்பிட்ட சாமி இதுவரை
வரம் ஏதும் கேட்டு தந்ததில்லை
நீ தந்த வரமெல்லாம் இனி
எந்த தெய்வமும் தரப்போவதுமில்லை
உன் கூடவே வாழ்ந்து முடிச்சு
ஏழு ஜென்மமும் கரை சேர்ந்து
கை கோர்த்து நான் நடப்பேன்
உன் தோளில் சாய்ந்து கூட வருவேன்
என் ஆசை மாமாவே...
நான் சூடும் ரோசாவே...
 --------------------------------------------------------------------------------------------
என் வாழ்வில்
என்றுமே திகட்டாத
ஒரே விஷயம்
நீ தான் !  
 --------------------------------------------------------------------------------------------
நீ என்னை நேசிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
என் ஆயுள் நீள்கிறது 
 
 --------------------------------------------------------------------------------------------
எட்டும் தூரத்தில் இருக்கும்
உன் இதயக்கனி நான்
ஏக்கம் துரத்தும் விரகத்தில்
என் உயிர்கனி நீ 

 --------------------------------------------------------------------------------------------
பல வடிவங்கள் கொண்ட வாழ்க்கை
பல பிம்பங்கள் கொண்ட மனிதன்
ஒருவரிடம் அன்பு ஒருவரிடம் வெறுப்பு
ஒருவரிடம் சிரிப்பு ஒருவரிடம் அழுகை
கதாபாத்திரங்கள் எத்தனை எத்தனையோ
காட்சிகளும் அத்தனை அத்தனை
வாழ்ந்தே ஆக வேண்டிய சூழலில்
மனிதனின் தொடர்கள் நீள்கிறது
வாழ்க்கை நாடகம் தினம் தினம்
மேடையில் அரங்கேறுகிறது
கதாபாத்திரம் காட்சியில் உள்ளவரை
வாழ்க்கை நாடகம் தொடரும்...
 --------------------------------------------------------------------------------------------
 என் சுயநினைவை
உன்னோடு எடுத்து சென்ற பிறகு
சுயம் அற்ற ஜீவனாய் நான்
விடிவதும் துயில்வதும்
உன் நினைவு கொண்ட
பொழுதுகளோடு தான்
 --------------------------------------------------------------------------------------------
என் மனம் உன்னை நினைத்து
துடிக்கும் போதெல்லாம்
என் காதல் ஒவ்வொரு
தடவையும் உயிர்பிக்கிறது
நினைவுகளே அலைகளாய்
மனதில் நீரோட்டமாய்
உன்னை சுமக்கின்றது
நொடி நொடியாய் கொல்கின்றது...
 --------------------------------------------------------------------------------------------
உன்னை தீண்டும் காற்றுக்கு
தெரியாது நீ என்ன ஜாதியென
உன்னை தீண்டிய அதே காற்றே
மேல் சாதியையும் கீழ் சாதியையும்
சுவாசத்திற்காக உயிர் வாழ தீண்டுகிறது
உங்களின் வேற்றுமை காற்றுக்கு தெரியாது
அதற்கும் கட்டுப்பாட்டை விதிக்காதீர்கள்
மீறினால் மூச்சுமுட்ட சாவீர்கள்...
 
 --------------------------------------------------------------------------------------------
உன் மனதை ஊடுருவ
நான் எய்தும் இந்த கணினி
மையினால் கொண்ட அம்பை
தடுக்காதே என் எழுத்துக்கள்
உயிர் நீத்துவிடும்....
 --------------------------------------------------------------------------------------------
முழுமதியில் நனைவதும்
விண்மீன்களை பறிப்பதும்
தென்றலை தழுவுவதும்
மிகவும் ரசனையானவை
மின்வெட்டுடன் இரவும்
ஒலிபெருக்கி சத்தமும்
என் ரசிகன் நீ இருந்தால்
பிடிக்காதது எதுவும் இல்லை
பிடித்த நீ இருக்கும் போது 
 --------------------------------------------------------------------------------------------
 என்னுள் உள்ள பெண்மையை
துளிர்விட செய்தவன் நீ
மொட்டாகி இருந்த காதல்
மனதில் எங்கும் பூத்து குலுங்க
நித்தம் உன் சித்தமாக
உன் நினைவில் யாசிக்கிறேன்
நீ வண்டோ இல்லை தேனியோ
காதல்மனம் தேடும் காமுகனோ
வஞ்சியவள் கண்ட மன்மதனோ
காதலில் தேன்சுவை நீ பருக
இதழ்கள் குவித்து பார்க்கிறேன்
உன் நினைவால் நான் தவித்து
வாடுவதற்குள் நீ வந்துவிடு !
 --------------------------------------------------------------------------------------------
வாழ்ந்த காலங்களை கணக்கில் கொண்டு
முகத்தில் அச்சாய் பல சுருக்கங்கள்
குடும்ப சுமைகளை சுமந்து சுமந்து
தோய்ந்துப்போன எலும்பும் தோள்கள்
பேரன் பேத்தி கொஞ்சல் மொழிக்காக
ஏங்கி தவிக்கும் செவிட்டு காதுடன்
பழையதை மெல்லும் பொக்கைவாய் பேச்சுகள்
ஊர் மெச்ச வளர்த்த மகனும்
பாராட்டி சீராட்டி வளர்த்த மகளும்
வாழ்வின் பாரமாக தொந்தரவின் உருவமாக
நெஞ்சில் நினைத்து செயலால் விதைத்து
பெற்ற எங்களை வேற்றாக பார்க்க
நாங்கள் இப்போ முதியோர் இல்லத்திலே
இறுதி நாட்களை விரைவில் வேண்டி
எம் பிள்ளைகள் நலமுடன் வாழ்ந்திட
அவர்களுக்கு வேண்டாம் எங்கள் நிலைமை
கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை…

 --------------------------------------------------------------------------------------------
தலைவனின் மனதில்
உள்ள கொள்கை
தீப்பிடித்து எரிந்ததால்
மனம் தாங்காது தன்
உடலில் தீ வைத்தான்
முட்டாள் தொண்டன்
அரசியல் உயிரையும்
எடுக்கும் தேவைபட்டால்
இது தியாகம் ஆகாது
அறிவின்மையின் உச்சவடிவம்

 --------------------------------------------------------------------------------------------
விழியோடு விழிமோதி
மொழியின்றி மௌனமாய்
இதயமும் இடமாறி
மனதும் தடுமாறி
சொல்ல முடியாமல்
தவிக்கிது மனசு...
காதல் மனசு...

 --------------------------------------------------------------------------------------------
இசையை ரசித்தேன்
மெய் மறந்தேன்
உன்னை ரசித்தேன்
இசையை மறந்தேன்...
 
 --------------------------------------------------------------------------------------------

ஆயிஷாபாரூக்    
 
1 comment:

  1. அனைத்தும் அருமை சகோதரி. தொடர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete