பெண்ணை விற்கும் சந்தையாம்
திருமண பந்த வியாபாரம்
வரதட்சனையை கைமாற்றி
பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்டி
சீர் சனத்தை கையிலேந்தி
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
ஜாதிகள் பார்க்கும் கிராமமாம்
ஏற்ற தாழ்வுகள் ஏராளம்
இரட்டைக்குவளை நடைமுறையாம்
தீண்டாமையை விலக்காமல்
சமமாய் மனிதனை பார்க்காமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
பலயினங்கள் வாழும் உலகமாம்
வேற்றுமை காணும் கண்ணோட்டம்
இனகொடுமை அரங்கேற்றம்
உயிரை பறிக்கும் அநியாயம்
இன வெறியாட்டம் நிறுத்தாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
உழைக்கும் வர்க்கம் அதிகமாம்
உழைப்பின் கூலியோ குறைவுத்தான்
பணக்கார முதலைகளுக்கு கொண்டாட்டம்
ஏழைகளின்பாடோ திண்டாட்டம்
அடங்கா ஏகாதிபத்தியத்தை எதிர்காது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
பெண்ணாய் பிறந்தால் பிரச்சனையாம்
சிசுகொலை செய்வது வழிமுறையாம்
ஆணாதிக்கம் மேலூங்கும் சமூகம்
பாலினப் பாகுப்பாடு பார்க்காமல்
பெண்ணுரிமையை பேணாமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
ஜனநாயகம் வாழும் தேசமாம்
ஊழலில் மிதக்கும் அரசியிலாம்
பணத்திற்கு ஓட்டை போட்டு
ஏமாந்து தவிக்கும்
மக்களை
அறிவு புகட்டி திருத்தாமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
வானம் பார்க்கும் பூமியாம்
மழைக்கு ஏங்கும் விவசாயி
குறைந்து போச்சு விவசாயம்
மரங்களை வெட்டி நிலமாக்கி
பசுமை புரட்சி செய்யாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
பாலியல் கொடுமை ஒருபக்கம்
மதவெறி கூட்டம் மறுபக்கம்
ஏற்றுத்தாழ்வுகள் இங்கு ஏராளம்
பசிப்பட்டினியோ தாராளம்
கண்டும்காணாமல் சரிசெய்யாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...
சமுதாயம் என்பது நாம் தான் தோழர்களே, அடுத்தவர் மாற்றம் ஏற்படுத்துவார் என்று காத்துநிற்பதை விட நாமே மாற்றத்தை தொடக்குவோம். சமுதாயம் மாற்றம் நம்மோட தான்
தொடங்க வேண்டும்… தோழர்களே!!!
அன்புடன்
ஆயிஷா பாரூக்
அருமை தோழியே..
ReplyDeleteஉங்கள் கவிதைகள் என் மூளையையும் சீண்டுகிறது. நல்ல கருத்துக்கள. விரைவில் நாம் மாற நாடும் மாறும். எழுத்தை தொடரவும்.