![]() |
| காதல் கரைசேர கலந்துவிடு |
உன் விழிப்பார்வை உயிர் வரை பாயுமே
உன் இதழ் புன்னகை
என் உயிரை காக்குமே
காதல் சொல்ல காத்திருந்தேன்
காலம் போனதை உணரவில்லை
வாழும் நாளை பார்த்திருந்தேன்
வசந்தம் போனதை
அறியவில்லை
உன்னை சேரும்வரை
தவமிருப்பேன்
வயது போவதில் கவலையில்லை
காதலின்
ஆழம் கண்டுவிட்டேன்
உன் மனதின் ஆழம் காணவில்லை
வாழ்வதும் மடிவதும்
உன் பதிலில் தான்
காதலும் துயரமும்
ஒரு சாபம் தான்
கல்லறை சேரும்
வரை இது
தொடரும் காதல்
கதைத்தான்
காலங்கள்
கடந்து போனாலும்
நீங்காது
நினைவுகள்
தான்
என்னுயிரே
ஆருயிரே உணர்ந்துவிடு
நம் காதல் கரைசேர
இணைந்துவிடு
இல்லையென்றால்
உனதுயிரை எடுத்துவிடு
அன்புடன்
ஆயிஷாபாரூக்
