உலகத்துல ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனையோ தாலாட்டு பாட்டு எழுதி இருக்காங்க. எனக்கு
தெரிஞ்சு யாரும் திருநங்கை தாலாட்டு பாட்டு எழுதினது கிடையாது. தாய்மை எங்களுக்கும்
உண்டு. வீட்டில் இருந்து துரத்தப்பட்ட திருநங்கைகள் பலரும் திருநங்கைகளால் தத்து எடுக்கப்பட்டு
தாய்மை அடைகிறோம். என் வரிகளில் திருநங்கைக்கு ஒரு தாலாட்டு பாட்டு,திருநங்கை
சமூகத்திற்கு இதை மகிழ்ச்சியுடன் அர்பணிக்கிறேன்.
பெத்த மனம் அங்கே இருக்க
பிள்ளை மனம் இங்கே ஏங்கி நிக்க
உன் பொறப்ப குறை சொல்லி
வீட்டை விட்டு போக சொல்லி
அழுத மனம் ஆறுதல் தேட
என் மடி தலை சாயி செல்ல மகளே….
முடமோ பிறந்தாலும் மனநிலை திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பாலியல் மாறி பிறந்த நம்ம மட்டும்
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
நம்ம பொறப்பு ஒசந்த பிறப்படி
நீ உறங்கு பெண்ணான ஆண்மகளே….
கருத்தரிக்க வழியுமில்லை
கர்ப்பம் சுமக்க பையும் இல்ல
ஆனாலும் நான் மலடி இல்ல
தாய்மையை உணர்ந்து ஏன் மகளா
தத்து எடுத்தேன் வாழ்க்கை முழுக்க
கவலையின்றி நீ தூங்கு தெய்வ மகளே….
அன்புடன்
ஆயிஷாபாரூக்
வணக்கம்
ReplyDeleteதிருநங்கைகளுக்கு அருமையான தாலாட்டை அள்ளிக் கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தாலாட்டு அருமை அருமை உங்கள் வலைப்பக்கம் வருவது முதல்தவை
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteதிருநங்கைகளுக்கு அருமையான தாலாட்டை அள்ளிக் கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தாலாட்டு அருமை அருமை உங்கள் வலைப்பக்கம் வருவது முதல்த்தடவை
-அன்புடன்-
-ரூபன்-
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
ReplyDeleteபதிவர் சந்திப்பிற்கு வாருங்கள்...
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே
ReplyDeleteவனக்கம்.
ReplyDeleteநான் உங்கள் வலைக்கு புதிய தோழி.
நம்மவர்களுக்கு அருமையன தாலாட்டை இயற்றிய தாங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் பானு