April 4, 2013

ஆயிஷாவின் சிந்தனை முத்துக்கள்




  • மனிதனுக்கு உதவி புரிதல், இனிமை, அன்பு, பொறுமை, பணிவு, நேர்மை, எளிமை, தன்னடக்கம் போன்ற நல்ல குணாதிசியங்கள் இருக்கும் அதுபோல பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அவதூறு சொல்வது, கர்வம், ஆணவம், பழிவாங்கல், திமிர் என்ற சில கெட்ட குணாதிசியங்கள் இருக்கும். நாம் பழகும் நபர்களிடம் நல்ல குணாதிசயம் மட்டும் தேர்ந்தெடுத்து பழகுவோம் தோழமைகளே. 
  • விரலுக்கு சேரும் மோதிரமே நல்லது, காலுக்கு சேரும் செருப்பே சிறந்தது... அதுபோல மனதிற்கு இதமான துணையை தேர்ந்தெடுப்பதில் காலம் தாமதமானாலும், சரியான இணையை தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை ஒருமுறை தான்...
  • அதிகப்படியாக நம்மிடம் அடுத்தவருக்கு தாரளமாக வழங்க நம்மிடம் இறைவன் கொடுத்த விஷயம் தான் அன்பு. அந்த அன்பை நாம் யாருக்கும் வழங்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்.அன்பு கொடுக்க கொடுக்க குறையாது. அனைவருடன் அன்பாக இருப்போம். 
  • விட்டுப்போன நட்பை மீண்டும் தொடரலாம், ஒரு சின்ன அழைப்பின் மூலம்... எங்கேயோ தொலைத்த நல்ல பொழுதுகளின் அடையாளங்கள் கடந்த காலக் நட்புகள்... வெறும் ஞாபகங்களாய் மனதின் மூலையில் இன்று...
  • ஒரு சிலரின் வளர்ச்சி ஒரு சிலருக்கு சம்மந்தமே இல்லாமல் பொறாமை பட வைக்கிறது. ஒருவேளை அவர்களின் இயலாமை அல்லது தாழ்வுமனபான்மையின் வடிவமாக இருக்கலாம்.அடுத்தவரை நினைத்து பொறாமை படுவதை விட்டுவிட்டு தங்களின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது.
  • சோம்பேறியாக இருக்கும் மனிதனையும் வாழ்கையின் ஒரு கட்டத்தில் பம்பரமாய் ஓடவைக்கிறது நேரம், பொழுதுகள் மாறி மாறி மனிதனின் நிலைமையை புரட்டிப் போடுகிறது காலம், இறந்த மனிதனும் மீளுவதில்லை கடந்த போன நேரமும் வரப்போவதில்லை, நேரத்தை வீனடித்தவர்கள் கவலையுறுகின்றனர் நேரத்தை பயன்படுத்தியவர்கள் மேன்மையடைகின்றனர். 
  • நம் வாழ்க்கை ஒரு புத்தகம் போல, முதல் வரியும்(பிறப்பும்) கடைசி வரியும்(இறப்பும்) ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது, நடுவில் உள்ள பக்கங்கள் அனைத்தும் நம்மால் எழுதப்படுபவை. புத்தகத்தின் எஞ்சியுள்ள பக்கங்கள் அழகாகவும், அசிங்கமாகவும் எழுதுவது அவரவர் விருப்பம். அன்பு, அர்பணிப்பு, புன்னகை, அமைதி,தியாகம், பொறுமை, உதவி, நல்ல எண்ணம் என்று அந்த பக்கங்களை அழகாக்க முயலுவோம் தோழமைகளே...
  • சில நல்ல உறவுகள், நட்புகள் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து தொடர்பு முறிந்து மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய நினைவாக மின்னிக்கொண்டு இருக்கும். அப்படி பட்ட உறவுகள், நட்புகள் மீண்டும் நம் வாழ்வில் அவசியம் வேண்டுமோ என்பதை தீர்மானிப்பது நம் ஈகோ மட்டுமே... வெறுப்புக்காகவும், பிரிவுக்காகவும், சண்டைக்காகவும் வாழ்கையில் பெரும் பகுதி ஒதுக்க வேண்டாம். 
  • வீட்டில் முதியவர்கள் விரும்பி வைத்து இருக்கும் பழைய பொருட்களை களையாதீர்கள். சில பொருட்களில் சில நினைவுகள் நிறைந்து இருக்கும். அந்த பொருட்கள் நமக்கு மிக சாதரணாமாக இருக்கலாம், ஆனால் முதியவர்களுக்கு அது பொக்கிஷம்.
  • பொதுவாக ஒருவரை நாம் புரிந்துக்கொள்ளாமல் போவதற்கு முக்கிய காரணம், நாம் அவரை வெறுப்பது தான். வெறுப்பதாலே நாம் அவரை புரிந்துகொள்ள மறுக்கிறோம். புரிந்துக்கொள்ளக்கூடிய சந்தர்பத்தை கூட தவிர்க்கிறோம். ஒருவரை புரிந்துக்கொண்டால் வெறுப்பு நிகழாது. ஒருவரை புரிந்துகொள்ள முயற்சிப்போம். வெறுப்பு வேண்டாமே...
 

3 comments:

  1. சிறப்பான கருத்துக்கள் பல... பாராட்டுக்கள்....

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete